Saturday, April 24, 2010

பல்பு ஒரு பார்வை




வரலாறு

மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே மின்சாரம் பாயும்போது ஒளி உண்டாவதைக் கண்டு பிடித்தார். எனினும் இம் முறையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்கும் முயற்சிகள், மின் முனைகள் மிக விரைவாக எரிந்து போனதன் காரணமாக செயல் முறையில் வெற்றி பெறவில்லை. ஜேம்ஸ் பிறெஸ்கொட் ஜூல் என்பவர், மின்சாரம் ஒரு மின்தடையுள்ள கடத்தியூடாகப் பாயும்போது அது வெப்பமடைந்து, அவ் வெப்பசக்தி மின்சக்தியாக மாறி ஒளிரும் எனக் கண்டுபிடித்தார். ஆனாலும் இக் கோட்பாட்டைப் பயன்படுத்தி மின் விளக்குகளை உருவாக்குவதற்குத் தேவையான நுண்ணிழைகளைச் செய்வதற்குப் பொருத்தமான பொருளொன்று அகப்படாமையும், அதனை விரைவில் எரிந்துபோகாது பாதுகாக்க முடியாமையுமே முக்கியமான தடைகளாக இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேர் ஜோசப் வில்சன் ஸ்வான் என்பவரே வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கியவராவார். ஆனாலும் இவர் குமிழினுள் உருவாக்கிய வெற்றிடத்தை நிலையாக வைத்திருக்க முடியாததினால் இவரது முயற்சி தோல்வியடைந்தது. 1879 இல் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தொமஸ் அல்வா எடிசனுக்குக் கிடைத்தது.


ஆனால் இந்த குண்டு பல்பு களுக்கு டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது குண்டு பல்புகலை விட பல மடங்கு மின்சாரத்தை குறைவாக செலவு செய்து பளிசென்ற ஒளியை நிரப்பும் CFL விளக்குகள் ஆக்ரமிக்க தொடங்கி விட்டன.


நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த எனர்ஜி சேவராக செயல் படுகிரது.