Tuesday, February 9, 2010

வைரஸ்

வைரஸை வாசலிலேயே தடுக்கும்

விண் பெட்ரோல்

நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன. இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.

இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.

இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.

வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும். ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.winpatrol.com என்ற தளத்திற்குச் செல்லவும்.

பவர்பாய்ண்ட் பயனுள்ள கீ தொகுப்புகள்


பல வாசகர்கள் பவர் பாய்ண்ட்டுக்கு ஷார்ட் கட் கீகளை அவ்வப்போது நினைவில் வைக்கும் வகையில் தொடர்ந்து தரக் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏனென்றால் இந்த தொகுப்பைப் பயன்படுத்துவது மற்ற தொகுப்புகளோடு ஒப்பிடுகையில் குறைவு தான். எனவே தான் அவ்வப்போது இவற்றை நினைவில் கொண்டு இயக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.


Ctrl + Shift + D: அப்போதைய ஸ்லைடின் டூப்ளிகேட் ஸ்லைட் ஒன்றை உருவாக்கும்.


Ctrl + M: புதிய ஸ்லைட் ஒன்று இணைக்கப்படும். இதில் ஸ்லைட் லே அவுட்டினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


Ctrl + K: புதிய ஹைப்பர் லிங்க் ஒன்றை இனைக்க ஒரு விண்டோ திறக்கப்படும்.


Page Up: பின்னோக்கி ஒரு ஸ்லைடுக்குச் செல்லும் .


Page Down : முன்னோக்கி ஒரு ஸ்லைடுக்குச் செல்லும்.


உங்கள் ஸ்லைட் �ஷாவினை இயக்குகையில்


Enter, Shift அல்லது : ஒரு ஸ்லைட் முன்னோக்கிச் செல்லும்.


Backspace or P :ஒரு ஸ்லைட் பின்னோக்கிச் செல்லும்.


Esc:ஸ்லைட் �ஷாவினை முடிக்கும்.


B: கருப்பு திரையைக் காட்டும். மீண்டும் கீ அழுத்த அந்த திரையிலிருந்து மீண்டு வரும்.


W:வெள் ளை திரை யைக் காட்டும். மீண்டும் கீ அழுத்த அந்த திரையிலிருந்து மீண்டு வரும். ஒரு எண்ணை டைப் செய்து என்டர் அழுத்த அந்த எண்ணுடைய ஸ்லைடுக்குச் செல்லும்.


இன்னும் நிறைய ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை வேண்டும் என்றால் ஒரு ஸ்லைட் �ஷாவை இயக்கி அதன் இடையே F1கீயை அழுத்தவும். ஷார்ட் கட் கீகளின் முழுப் பட்டியலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment